முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய வர்த்தக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது

639

நீண்டகால இழுபறிகளுக்கு பின்னர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய வர்த்தக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் மெக்சிக்கோவையும் உள்ளடக்கியதாக இந்த முத்தரப்பு உடன்பாடு முதற்கட்ட இணக்கத்தை எட்டியுள்ளதாக கனடாவும் அமெரிக்காவும் கூட்டாக அறிவித்துள்ளன.

NAFTA என்பதற்கு பதிலாக தற்போது USMCA என அழைக்கப்படும் இந்த உடன்பாடு முதற்கட்ட இணக்கத்தினை எட்டியுள்ள நிலையில், இது கனடாவுக்கு ஒரு சிறந்த நாள் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். எனினும் அது குறித்த விளக்கங்கள் எதனையும் அவர் இதன்போது வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், இந்த USMCA உடன் பாடானது, எமது தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கான உயர்தர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், சிறந்த சம்பளத்துடனான வேலைகள் கிடைக்கும் எனவும், மத்திய தர வர்க்கத்தினரைப் பலப்படுத்தும் என்றும், கிட்டத்தட்ட அரை பில்லியன் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் விபரித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *