முக்கிய செய்திகள்

சசிகலாவுக்கு கொரோனா

38

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிவித்துள்ளது.

வரும் 27ஆம் திகதி விடுதலை செய்யப்படவிருந்த சசிகலாவுக்கு நேற்றுமுன்தினம் மூச்சு திணறல் ஏற்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில்,  இன்று மாலை 6 மணிக்கு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சசிகலாவுக்கு  கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவருக்கு செய்யப்பட்ட இரண்டு பரிசோதனைகளிலும் கொரோனா இருப்பதாக காண்பிக்கவில்லை.

அவருக்கு சுவாசத் தொற்று காரணமாக இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.

எனினும், இன்னும் 2 தொடக்கம் 3 நாள்களில் அவரை விடுவிக்க முடியும்” என்றும், கூறப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *