சவுதி அரேபியாவின் பெண் மனித உரிமை செயற்பாட்டாளருக்கு ஐந்துவருடங்கள் எட்டுமாதங்கள் சிறைத்தண்டனை

37

சவுதி அரேபியாவின் நன்கறியப்பட்ட பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் லுஜைன் அல் ஹத்துலுவுக்கு (Lujain Al Hatul) அந்த நாட்டின் நீதிமன்றம் ஐந்துவருடங்கள் எட்டுமாத சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

2018 முதல் சிறையிலிருக்கும் இவர்  சவுதிஅரேபியாவின் அரசியல் முறையை மாற்றியமைக்க முயன்றார் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண் மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *