முக்கிய செய்திகள்

சினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – பார்த்திபன்

886

நடிகர் விஷால் தலைமையிலான அணி, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதும் பல வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமான ஒன்று கியூப் பிரச்சினை. கியூப்புக்கு மாற்றாக மற்றொரு தொழில்நுட்பத்தை கொண்டுவருவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனமும் இணைந்து யூனிட் ஒன்றை திறந்துள்ளனர்.

இதன் திறப்புவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு, 5 ஸ்டார் கதிரேசன், நடிகர் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது. நாங்க தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம். ஏனென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.

அது போல தான் இந்த மைக்ரோ ஸ்டூடியோவின் முதல் படி. ஒருவன் பார் மசியில் கேட்கிறான். தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய் என்று கேட்கிறான். அதற்கு அவர் மருந்து கொட்டிவிட்டது என்றான்.

தேள் கொட்டினால் கூட பரவாயில்லை. மருந்து கொட்டியதென்றால் ரொம்ப கஷ்டம். அதுபோல் சினிமா வியாபாரத்தில் எந்த பிரச்சினையும் இருக்கலாம். அதற்கு நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால் தான் அதை சீர் செய்ய முடியும். குறிப்பா செல்வமணி பெப்சியின் தலைமைக்கு அவர் வந்தவுடன் நல்ல ஒற்றுமை வந்துள்ளது.

நான் கிட்டத்தட்ட 25 வருடம் சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது. தமிழ் சினிமா செல்வமணி சொன்னது போல் டெக்னிக்கெல்லாம் புரிந்து கொண்டு சினிமாவை நல்ல முறையில் கொண்டு வருவோம்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *