முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிரியாவில் தொண்டூழியர்களாக பணியாற்றிய 250 பேரையும் அவர்களது குடும்பங்களையும் கனடா ஏற்றுக் கொள்ளவுள்ளது

660

சிரியாவில் அனைத்துலக நாடுகளால் மேறகொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது, வெள்ளைத் தலைக்கவசம் அணிந்தவாறு தன்னார்வ தொண்டூழியர்களாக செயற்பட்ட 250 சிரியர்களையும் அவர்களது குடும்பங்களையும் கனடா தனது நாட்டுக்குள் ஏற்றுக் கொள்ளவுள்ளது.

சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகள் நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களை நேற்று கைப்பற்றியுளள நிலையில், அங்கு உதவிப் பணியாளர்களாக செயற்பட்டுவந்த இந்த வெள்ளைத் தொப்பித் தொண்டூழியர்கள் தமது குடும்பங்களுட்ன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நூற்றுக் கணக்கான சிரியத் தொண்டூழியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களை கனடா உள்ளிட்ட மூன்று மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளன.

ஏறக்குறைய 800 தொண்டூழியர்களும் அவர்களது குடும்பங்களும் யோர்தானை வந்தடைந்துள்ளதாக அனைத்துலக அறிக்கைகள் காட்டுகின்ற போதிலும், இநத் எண்ணிக்கை மாறுபடக்கூடும் என்று அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, நெதர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மேற்கொண்ட மிகவும் இரகசியமான நடவடிக்கை ஒன்றின் மூலமே இவர்கள் நாட்டைவிட்டு வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் நிலையில், கனடா இதில் நேரடியான இராணுவ நடவடி்ககைகளில் எவற்றிலும் ஈடுபடவில்லை எனவும், எனினும் அவர்களை சிரியாவில் இருந்து யோர்தானுக்குள் கெர்ண்டுவருவதற்கு உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களையும் இவர்களது குடும்பங்களையும் ஆய்வு செய்யும் பணிகளை ஐ.நா அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், கனேடிய அதிகாரிகளும் உடனடியாக அவர்களில் ஏற்றுக்கொள்ளப்படுவோரை கனடாவுக்குள் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் 50 தொண்டூழியளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தோர் என்று 250 பேரை கனடாவுக்குள் அழைப்பதற்கு மத்திய லிபரல் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், இந்த எண்ணிகையிலும் மாறுபாடுகள் காணப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்சிரியாவில் அனைத்துலக நாடுகளால் மேறகொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது, வெள்ளைத் தலைக்கவசம் அணிந்தவாறு தன்னார்வ தொண்டூழியர்களாக செயற்பட்ட 250 சிரியர்களையும் அவர்களது குடும்பங்களையும் கனடா தனது நாட்டுக்குள் ஏற்றுக் கொள்ளவுள்ளது.

சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகள் நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களை நேற்று கைப்பற்றியுளள நிலையில், அங்கு உதவிப் பணியாளர்களாக செயற்பட்டுவந்த இந்த வெள்ளைத் தொப்பித் தொண்டூழியர்கள் தமது குடும்பங்களுட்ன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நூற்றுக் கணக்கான சிரியத் தொண்டூழியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களை கனடா உள்ளிட்ட மூன்று மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளன.

ஏறக்குறைய 800 தொண்டூழியர்களும் அவர்களது குடும்பங்களும் யோர்தானை வந்தடைந்துள்ளதாக அனைத்துலக அறிக்கைகள் காட்டுகின்ற போதிலும், இநத் எண்ணிக்கை மாறுபடக்கூடும் என்று அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, நெதர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மேற்கொண்ட மிகவும் இரகசியமான நடவடிக்கை ஒன்றின் மூலமே இவர்கள் நாட்டைவிட்டு வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் நிலையில், கனடா இதில் நேரடியான இராணுவ நடவடி்ககைகளில் எவற்றிலும் ஈடுபடவில்லை எனவும், எனினும் அவர்களை சிரியாவில் இருந்து யோர்தானுக்குள் கெர்ண்டுவருவதற்கு உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களையும் இவர்களது குடும்பங்களையும் ஆய்வு செய்யும் பணிகளை ஐ.நா அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், கனேடிய அதிகாரிகளும் உடனடியாக அவர்களில் ஏற்றுக்கொள்ளப்படுவோரை கனடாவுக்குள் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் 50 தொண்டூழியளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தோர் என்று 250 பேரை கனடாவுக்குள் அழைப்பதற்கு மத்திய லிபரல் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், இந்த எண்ணிகையிலும் மாறுபாடுகள் காணப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *