தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கருத்தோவியக் கண்காட்சி போராட்டம்

195

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கருத்தோவியக் கண்காட்சியுடன் கூடிய போராட்டம் யாழ்ப்பாண நகரில் இன்று  இடம்பெற்றுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தெற்கில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்று சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடயத்திலும், தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் ஒன்று சேர்ந்து,  செயற்பட விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *