முக்கிய செய்திகள்

தைவான் நாட்டின் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்

408

தைவான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நியூ தைபே நகரில் உள்ள அந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை வேளை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைப்பதற்கு 200க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் சுமார் ஒரு மணி-நேரம் போராடினர்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்பார்வையிட்டு வருவதாகவும், இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *