நைஜரின் பிரதமராக முன்னாள் அமைச்சர் ஓஹ மஹமது நியமனம்

6

நைஜரின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் பஸூம் (Mohamed Bazoum) தனது அரசாங்கத்தை வழிநடத்த முன்னாள் அமைச்சர் ஓஹ மஹமதுவை (Ouhoumoudou Mahamadou) பிரதமராக நியமித்துள்ளார்.

தேசிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட ஒரு ஆணையின் மூலம், அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஓஹ மஹமது (Ouhoumoudou Mahamadou) சமீப காலம் வரை பஸூமின் தலைமை ஊழியராக பணியாற்றி இருந்தார்.

69 வயதான மகாமது முதன்முதலில் சுரங்கங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சராக பதவி வகித்தார்.

அவர் 2011 மற்றும் 2012 க்கு இடையில் நைஜரின் நிதி அமைச்சராகவும்,  2015 இல் ஜனாதிபதியின் தலைமை ஊழியராகவும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *