பாகிஸ்தானில் ஒட்சிசன் இன்மையால் கொரோனா நோயாளிகள் ஏழுவர் பலி

68

பாகிஸ்தானின் பெசாவர் நகரில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஒட்சிசன் முடிவடைந்ததன் காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு ஒட்சிசன் வழங்குபவர் உரிய நேரத்தில் அதனை விநியோகிக்கத் தவறியதன் காரணமாக கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்தனர் என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்த இந்தச் சம்பவம் குறித்து தனது கீச்சகத்தில் பதிவு செய்துள்ள மாகாண சுகாதார அமைச்சர் தைமூர் ஜக்ரா (Timur Zakra), உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு 48 மணித்தியாலங்களில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *