பூமியைத் தாக்க வரும் சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்?

1218

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் – 1 தனது கட்டுப்பாட்டை இழந்ததினால் பூமியை நோக்கி விழப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா டியாங்கோங் -1 என்ற விண்வெளி நிலையத்தை விண்வெளியில் 2016 ஆம் ஆண்டு அனுப்பியது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு பிறகு விண்வெளியில் பெரிய அளவில் நிறுவப்பட்ட சீனாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர், டியாங்கோங் -1 தனது வட்டப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதனால் அதனை தொடர்புகொள்ள முடியவில்லை என சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கான காரணம் தெரியாமல் சீன விஞ்ஞானிகள் தவித்து வந்த நிலையில் டியாங்கோங் -1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியை நோக்கி விழப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 9.5 டன் எடை கொண்ட இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மார்ச் 27 முதல் ஏப்ரல் 8 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நாட்களில் பூமியில் விழலாம் என்றும் வட மற்றும் தென் அமெரிக்கா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் ஆகிய இடங்களில் விழுவதற்கு வாய்ப்பிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *