முக்கிய செய்திகள்

பெரும்பாலான பாகங்களில் புகைத்தலை தடை செய்யும் கனடாவின் முதல் நகரமாக ஹலிஃபெக்ஸ் உருமாறியுள்ளது

376

பெரும்பாலான பாகங்களில் புகைத்தலை தடை செய்யும் கனடாவின் முதல் பெருநகரமாக ஹலிஃபெக்ஸ் உருமாறியுள்ளது.

ஹலிஃபெக்ஸில் உள்ள வீதிகள், பூங்காக்கள், நடைபாதைகள் உள்ளிட்ட நகர நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான புகைத்தல் செயற்பாட்டையும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கை பல்வேறு மட்டங்களிலும் வரவேற்பை பெற்றுள்ள போதிலும், குறைந்த வருமானம் பெறுவோரை பாரபட்சமாக நடாத்தும் செயற்பாடு இது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தவிர்க்கமுடியாது ஒரு முக்கிய நடைமுறையின் தொடக்கம் இது என்று கனேடிய புற்றுநோய் தடுப்புச் சங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது.

இதனை முன்னுதாரணமாக கொண்டு நாட்டின் ஏனைய நகரசபைகளும் இவ்வாறான புகைத்தல் தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூத்த கொள்கை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புகைப்பவர்களை ஒருபுறம் விட்டாலும், புகைக்கும் பழக்கம் அறவே அற்ற சாதாரண மனிதர்களும், இவ்வாறு பொது இடங்களில் புகைப்பவர்களால் கடுமையான பாதிப்பினை எதிர்கொள்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *