முக்கிய செய்திகள்

போலியான தொலைபேசி அழைப்புக்களின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக Guelph Hydro மற்றும் Alectra Utilities ஆகிய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

298

போலியான தொலைபேசி அழைப்புக்களின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக  Guelph Hydro  மற்றும் Alectra Utilities நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமது நிறுவனத்திலிருந்து அழைப்பு ஏற்படுத்துவதாகக் கூறி போலியான முறையில் சட்டவிரோத குழுவொன்று அழைப்புக்களை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

நிலுவைக் கட்டணத்தை செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சிலர் தொலைபேசி ஊடாக எச்சரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் தானியங்கி அழைப்புக்கு நிகரான வகையில் இந்த அழைப்பு துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கு இடமான அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டால் அது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *