முக்கிய செய்திகள்

“மராத்தா” சமூகத்தினர் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது

323

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி “மராத்தா” சமூகத்தினர் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடாத்தப்பட்ட நிலையில், அந்த முழு அடைப்பு போராட்டம் கலவரமாக மாறியதில், காவல்துறையினரின் 2 வாகனங்கள் உள்பட 50 வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை அடுத்து, அங்கு பதற்றமான நிலைமை காணப்படுகின்றது.

இதனிடையே மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும், சிவசேனாவைச் சேர்ந்த ஒருவரும் என்று 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தகங்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

மராத்தா சமூகத்தினரின் இந்த போராட்டம் அந்த மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் மாநில மக்கள் தொகையில் 30 சதவீதமாக உள்ளதுடன், இவர்கள் அங்கு அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகவும் கருதப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *