முக்கிய செய்திகள்

முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்வதனூடாக செய்ய முடியாது

129

ஒரே நாடு, ஒரே சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமானால், முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்வதனூடாக அதனை செய்ய முடியாது என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் அண்மையில் சபையில் வினவியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் இன்று பதில் வழங்கினார்.

இதன்போது, நாட்டில் கண்டிய விவாக விவாகரத்து சட்டம், யாழ்ப்பாண விவாக தேச வழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம், பௌத்த விகாரைகள் சட்டம், இந்து கலாசார சட்டம், முஸ்லிம் வக்கூப் சட்டம், Church of Ceylon சட்டம் போன்ற தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்ய முடியாது என அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *