முக்கிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் பகுப்பாய்வு

104

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்படுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

18 மில்லியன் எஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள, ஒளடதங்கள் கூட்டுத்தாபனம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி இந்திய அரசாங்கத்திடம் இருந்து அவற்றை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த மாதமளவில் மற்றுமொரு தொகை தடுப்பூசி கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையுள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி தென்கொரிய உள்ளிட்ட 22 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாவனையில் உள்ளது.

இந்த நிலையில் குறித்த தடுப்பூசியையும் விரைவில் பகுப்பாய்வு செய்து அதற்கான பதிவை பெற்றுதருமாறு ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்திடம் கோரப்பட்டுள்ளது.

எனவே, ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *