முக்கிய செய்திகள்

ரொரன்ரோவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்

550

ரொரன்ரோவில் நேற்று இரவு இடம்பெற்ற மிக மோசமான துப்பர்ககிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரியை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

நேற்று இரவு பத்து மணியளவில் ரொரன்ரோ Danforth பகுதியில் இடம்பெற்ற இந்தக் கோரத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் வரையில் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவந்த ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், இன்று பிற்பகல் துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

துப்பர்ககிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் அந்த நபர் ரொரன்ரோவைச் சேர்ந்த 29 வயதான ஃபைசால் ஹூசெய்ன்(Faisal Hussain) எனவும், அவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவம் குறித்து அறி்க்கை ஒன்றினை வெளியிட்டுள்ள குறித்த அந்த சந்தேக நபரின் குடும்பத்தினர், அவர் மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் மிகவும் பயங்கரமானது எனவும், எனினும் அவர் மிக நீண்ட காலமாக மனநோய்க்கு உள்ளாகியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலும் தகவல் வெளியிட்டுள்ள அதிகாரிகள், ஒருவர் 18 வயதான றீஸ் ஃபாலன்(Reese Fallon) எனவும், மற்றையவர் ரொரன்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி என்றும் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *