முக்கிய செய்திகள்

வட மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு.

1258

வட மாகாணத்தில் பணிபுரியும் சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

சட்டரீதியற்ற சில இணையதளங்கள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதவான் ஆகியோர் தொடர்பாக  அவதூறு பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சட்டத்தரணிகள், குறித்த அந்த இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியே இன்றைய  இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறான இணையதளங்களை தடை செய்யும் வகையிலான சட்டமூலங்களை அரசாங்கம் இயற்ற வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் கலந்துகொண்டுள்ளனர்.

சட்டத்தரணிகளின் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நீதிமன்றங்களில் இன்றைய நாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த சகல வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *