முக்கிய செய்திகள்

வெற்றிக்காக ஜோர்ஜிய ஆளுநனருக்கு அழுத்தமளித்தரா ட்ரம்ப்?

23

”தாம் வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி”  ஜோர்ஜியா (Georgia) மாநில ஆளுனருக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜோர்ஜியா மாநிலத்தில் ட்ரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த பிரயான் கெம்ப் (Brian Kemp) ஆளுனராகவுள்ளார்.

அவரை தொடர்பு கொண்ட ட்ரம்ப், மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, தமக்கு ஆதரவான ஜனாதிபதி தேர்வர்களை தெரிவு செய்ய வற்புறுத்தியதாகக்  கூறப்படுகிறது.

ஜோர்ஜியாவில் ஜோ பைடன் வெற்றி பெற்றமை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்குமாறும் ட்ரம்ப் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட தமக்கு அதிகாரம் இல்லை என கூறிய ஆளுனர் பிரயான் கெம்ப், (Brian Kemp) ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *