முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வெளிநாட்டு முதலீடு மற்றும் அபிவிருத்திற்கு இந்தியா உதவும்

324

சிறிலங்காவின் வெளிநாட்டு முதலீடு மற்றும்  அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

72nd Republic Day Celebrations Embassy of India Colombo முன்னிட்டு கொழும்பில் உள்ள தூதரகத்தில் இன்று நடந்த கொடியேற்று நிகழ்வில் உரையாற்றிய இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இந்தியாவின் இந்த அர்ப்பணிப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து செயற்படுவதால் சமகால பொருளாதார மற்றும் பிற சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 8ஆம் நாள் தாம் கொழும்புக்கு பணியாற்ற வந்த பின்னர் 12.5 மெட்றிக் தொன் மருந்துப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளதாகவும் இந்திய தூதுவர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கும், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், சூரிய சக்தி மற்றும் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், சிறிலங்காவுக்கு உதவ இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவெளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும் இன்று காலை இந்திய குடியரசு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *