முக்கிய செய்திகள்

வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை

160

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மருந்தினை பயன்படுத்துபவர்கள் அதற்கு முன்னர் மருந்தினை பயன்படுத்த சம்மதிக்கும் படிவமொன்றில் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் மருந்தினை பெறுவதற்கு தயங்கியவர்கள் பின்னர் தங்கள் மனதை மாற்றினால் அவர்கள் குறிப்பிட்ட நிலையங்களில் தங்களிற்கான மருந்தினை செலுத்திக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *