முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காணாமல்போனோர் பணி­ய­கத்­துக்கு நம்­ப­க­மான ஆணை­யா­ளர்­களை நிய­மிக்க வேண்டும்!

976

காணா­மல்­போனோர் பணி­ய­கத்தை உரு­வாக்கும் வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வெளியி­டப்­பட்­டுள்­ளதை வர­வேற்­றுள்ள மேற்­கு­லக நாடுகள், இந்தப் பணி­ய­கத்­துக்கு நம்­ப­க­மான ஆணை­யா­ளர்­களை நிய­மிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

காணாமல் போனோர் பணி­ய­கத்தை இன்று வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி தொடக்கம் செயற்­ப­டுத்தும், வர்த்­த­மானி அறி­விப்பை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்டார். இதற்கு அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம், கனடா உள்­ளிட்ட நாடுகள் வர­வேற்புத் தெரி­வித்­துள்ளன.

இது தொடர்­பாக அமெ­ரிக்க தூதுவர் அதுல் கெசாப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை இட்­டுள்ளார். அதில் அவர், நல்­லி­ணக்­கத்­துக்­கான முன்­நோக்­கிய முக்­கி­ய­மான நகர்வு. நன்கு நிதி­ய­ளிக்­கப்பட்ட, வலு­வான, சுதந்­தி­ர­மான, நன்கு தகுதியான ஆணை­யா­ளர்­க­ளுடன் செயற்­படும் காணாமல்போனோர் பணி­யகம், பதில்­களைத் தேடும் அனைத்து சமூ­கங்­க­ளையும் சேர்ந்த குடும்­பங்­க­ளுக்கும் நம்­பிக்­கையை அளிக்கும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

அதே­வேளை, காணா­மல்­போனோர் பணி­யகம் செயற்­படத் தொடங்­கு­வது, வர­வேற்­கத்­தக்க, முக்­கி­ய­மான ஒரு நட­வ­டிக்கை. நம்­ப­க­மான ஆணை­யா­ளர்­களை விரை­வாக சேர்த்துக் கொள்ள முடியும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் நம்­பு­கி­றது என்று ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முக்கியமான, சாதகமான நகர்வு. அடுத்த கட்டம், ஆணையாளர்கள் மற்றும் செயற்படுதல் என்று கனடா தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *