முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்கா அரசாங்கத்தால் வாக்குறுதியை மீறமுடியாது; சுமந்திரன்

344

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை சிறிலங்கா அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் வவுனியா இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்தத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பிற்குப் பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினையும் இணைத்து தெளிவான ஒரு கலந்துரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இங்கே இருக்கின்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல்கட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரது தரப்பும் இணைந்து மார்ச்சில் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைபப் பேரவை அமர்வில் பொதுவான நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கிறது.

அதுதொடர்பாக அனைத்து தரப்புக்களிடமும் கலந்துரையாடி ஒரு வரைபைத் தயாரித்து அந்த நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை, நான் தயாரித்ததாக கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட வரைபு புலம்பெயரந்த அமைப்புக்களால் வரையப்பட்டது. அதனை நான் வரைந்ததாகத் தெரிவித்து இரு கட்சியினர் நிராகரித்துவிட்டனர். பின்னர் அதற்கு விக்னேஸ்வரன் ஐயா அனுமதியை வழங்கியிருப்பதாக மின்னஞ்சல் ஒன்றைப் பார்த்தேன்.

நான் வரைந்தபடியால் நிராகரிக்கப்பட்டிருந்தது. நான் வரையவில்லை எனத் தெரிந்ததும் ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது.

அது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் இதுவரை பேசி இணக்கப்பாடு ஏற்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து ஒரு நிலைப்பாட்டிற்கு வரலாமா என்பது குறித்து ஆராய்வோம் என்று குறிப்பிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *