முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது; ஆங் சாங் சூசி கைது

211

மியன்மாரின் நிர்வாக தலைவர் ஆங் சாங் சூசி (Aung San Suu Kyi) உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

நாட்டின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட சில மணித்தியாலங்களுக்கு பின்னர், ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மியன்மாரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக, தொலைக்காட்சியின் ஊடாக இராணுவம் அறிவித்துள்ளது.

ஆட்சியை வசப்படுத்தியுள்ளதாக அறிவித்த இராணுவம், தளபதி மின் ஆங் ஹ்லேங்கிடம் (Min Aung Hong) அதிகாரத்தை ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது.

மியான்மரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக பதற்றம் நிலவி வந்தது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கட்சி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருந்தது.

எவ்வாறாயினும் தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக மியன்மார் இராணுவத்தினரால் குற்றஞ்சாட்டப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *