முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.

1769

ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் நேற்ற பிற்பகல் வேளையில் சிற்றுர்தி ஒன்றினால் மோதி, பத்து பேர் பலியாகவும், 15 பேர் படுகாயமடையவும் காரணமாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

றிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அலெக் மினாசியன்(Alek Minassian) என்பபடும் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவர் மீது எவ்வாறன குற்றச்சாட்டுக்ள பதிவு செய்யப்பட்டுள்ள என்ற பிபரங்கள் எதனையும் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

எனினும் இன்று காலையில் அவர் ரொரன்ரோ நீதிமன்றில் முன்னிறுத்தப்ப்டவுள்ள நிலையில், குறித்த இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்களை இன்று காவல்துறையினர் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் 1.30 அளவில், Yonge Street மற்றும் Finch Avenue பகுதியில் உள்ள வீதியோர நடைபாதை மீது குறித்த இந்த நபர் சிற்றூர்தியைச் செலுத்திச் சென்றதில், பத்து பேர் பலியானதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்து்ளளது.

பிற்பகல் வேளையில் ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் சிற்றூர்தி ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 9 பேர் பலியானதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Yonge Street மற்றும் Finch Avenue பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் மூன்று மணி நேரத்தின் பின்னர் அது குறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்துறையினர். இந்த சம்பவத்தின் போது 25 பேர் பாதிகக்ப்பட்டதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாரிய அளவிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதனால், அந்த பகுதி ஊடான போக்கவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இநத சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தம்மிடமுள்ள தேவையான அனைத்துவித வளங்களும் சம்பவ இடத்தில் ஒன்று குவிக்கப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த சிற்றூர்தியைச் செலுத்திச் சென்றவர் அலெக் மினாசியன்(Alek Minassian) என்பவர் எனவும், அவர் இதற்கு முன்னர் காவல்துறையிரால் அறியப்பட்டவர் இல்லை என்றும் கூறப்படுவதுடன், இந்த செயலை செய்தமைக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுவேளை குறித்த இந்த பகுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களையும், அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடி, விசாரணைகளுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் ஒத்துளைப்பு வழங்குமாறு ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நோர்த் யோர்க்கில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண அரசியல் தலைவர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் றால்ஃப் குட்டோல் விடுத்துளள அறிக்கையில், சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டினை பதிவு செய்யும் வகையில் இதுவரை தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும், இந்த சம்பவம் காரணமாக கனடாவின் பாதுகாப்பு நிலையில் மாற்றங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல நாட்டின் பாதுகாப்பு மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அளவுக்கு, இந்த சம்பவம் தொடர்பில் இன்னமும் போதிய தகவல்கள் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *