டெல்லியில் சுமார் 3,700 பேருக்கு சிக்குன்குன்யா நோய் அறிகுறி இருப்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சமீபத்தில் இவர்களது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் ஆய்வு செய்துள்ளனர். முன்கூட்டியே நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் 16,918 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கர்நாடகாவில் 9808 பேரும், மகாராஷ்டிராவில் 1024 பேரும் சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.