சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர் என பேசப்பட்டுவந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அந்த அதிகாரி கடிதம் ஒன்றையும் எழுதிவைத்திருந்தார் எனவும், அதில் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை தாமே கொலை செய்ததாகவும், தன்னுடைய நண்பன் மலிந்த உதலாகம, குற்றவாளி அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடிதம், அவரது காற்சட்டை பையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரியான இவர், லசந்த விக்கிரமதுங்கவை தாமே கொலை செய்ததாக கூறி ஏற்கனவே குற்றத்தை ஏற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.