முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு அதிமுக செய்தித்தொடர்பாளரும், அதிமுகவின் மூத்த தலைவருமான பொன்னையன் ஜெ.,வின் நலம் விசாரிக்க அப்பல்லோ வந்தார். அங்கே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்கிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்துக்கொ ள்கிறார். அவர் விரைவில் மக்கள் பணியாற்ற மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.