யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் உந்துருளிகளில் இளைஞர்கள் இரவுவேளைகளில் நடமாடி திரிவதை அவதானிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில், நல்லூர் பருத்தித்துறை வீதியில் வாள்களுடன் இளைஞர்கள் அதிகளவில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.
இவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றமையால், அத்தியாவசிய தேவைக்காக கூட தமது பிள்ளைகளை வெளியில் அனுமதிப்பதில்லை என்று அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்து்ளார்.
இராணுவம், காவல்த்துறை, சிறப்பு அதிரடிப்படையினர், காவல்த்துறை புலனாய்வாளர்கள், இராணுவபுலனாய்வாளர்கள் பெருமளவில் கடமையில் இருந்தும், வாள் வெட்டுகும்பல்கள் துணிகரமாகவும், சுதந்திரமாகவும் உலாவுவது எப்படி எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.