அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதில் வேட்பாளர்களாக போட்டியிடும் கிளாரிக் கிளிண்டன் மற்றும் டொனால்ட் ரம்ப் ஆகிய இருவரும் தமது இறுதிக் கட்டப் பிரச்சாரங்களில் காரசாரமான விவாதங்களை முன்வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப், “தில்லுமுல்லு” அமைப்பு முறையால் சனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஹிலாரி பாதுகாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்கள் தொடர்பில் மேலும் ஆய்வு செய்த அந்த நாட்டின் தலைமை உளவுத்துறையான FBI, அவர் மீது புதிய நடவடிக்கை எடுக்கும் முகாந்திரம் ஏதுமில்லை என அறிவித்துள்ளமை தொடர்பில் விமர்சித்தே டிரம்ப் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதேவேளை FBI-இன் இந்த அறிவிப்பினால் சரிய ஆரம்பித்த ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கிளிரிக் கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுப்பதாக FBI அறிவித்ததை அடுத்து கிளாரிக் கிளிண்டனுக்கான மக்கள் ஆதரவு சற்று குறைவடைந்ததை கருத்துக் கணிப்புக்கள் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.