தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி 5 மணி வரை நடைபெற்றது. 4 தொகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் 812 வாக்குச்சாவடிகள் உள்ளன. 812 வாக்குச்சாவடி மையங்களும் வீடியோ மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் 26 வாக்குச்சாவடியில் 31,336 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர். தஞ்சையில் 60.54 சதவீத வாக்குகளும் அரவக்குறிச்சியில் 73.29 சதவீத வாக்குகளும் , திருப்பரங்குன்றத்தில் 62.76 சதவீத வாக்குகளும் , நெல்லித்தோப்பில் 75.97 சதவீத வாக்குகளும் பதிவாகின. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடைபெறும்.
தஞ்சை தொகுதி வாக்குகள் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியிலும், அரவக்குறிச்சி தொகுதி வாக்குகள் கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. நெல்லித்தோப்பு தொகுதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் நடைபெறுகிறது.