தமிழின விடுதலைக்காக வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் மாவீரர் நாளில் ஒன்று சேர வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது உறவுகளை நினைவேந்துவது எமது உரிமை என்றும் தெரிவித்துள்ள அவர், அவ்வாறு அந்த உரிமையை மறுப்பதானது, பேரினவாத ஆட்சி தொடர்கின்றது என்பதையே வெளிப்படுத்தி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்குவரும் இராணுவமயப்படுத்தபட்ட இனவாத பேரினவாத அரசுகள், இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே இம்முறை வீரமறவர்களை நினைவேந்துவது என்பதை அரசாங்கம் தடுக்க முற்படக்கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.