அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பண்டகசாலை ஒன்றில் தீ மூண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 25 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக கூறும் அதிகாரிகள், குறித்த பண்டகச்சாலையில் மது விருந்துடன் நடன நிகழ்ச்சி இடம்பெற்ற போது தீ முண்டதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.