பப்புவா நியூ கினியா அருகே இன்று ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரபால் பகுதியில் இருந்து 157 கிலோமீற்றர் கிழக்கில் கடலுக்கடியில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், மேற்கு பசுபிக் பிரதேசம் முழுவதும் பரந்த மற்றும் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பப்புவா நியூ கினியா அருகே இன்று ஏற்பட்ட இந்த வலுவான நிலநடுகத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இன்னமும் வெளியாகவில்லை.