தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கொள்கையிலிருந்து இன்னும் மாற்றமடையவில்லை எனவும், அந்தக்கொள்கையிலிருந்து கூட்டமைப்பு மாற்றமடையாத வரையில் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் அன்று முதல் இன்று வரை சிங்கள மக்கள் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை எனவும், எனவே கூட்டமைப்பினர் எதிர்பார்ப்பது போல் அவர்களின் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றும் நிஷாந்த வர்ணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்