உலக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 2017-ம் ஆண்டு நேற்று பிறந்தது. நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது உட்பட பல்வேறு சுவாரசியங்களுடன் பிறந்த இந்த ஆண்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.
இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண்ணாகப் பிறந்தது, குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த
மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.