உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது ‘மெயின் காம்ஃப்’ (மை ஸ்டிரகிள்) என்ற சுயசரிதை எழுதினார்.
ஹிட்லரின் அரசியல் சிந்தனையை விளக்கும் வகையிலான இந்த புத்தகம் முதலில் 1925,ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2,ம் பாகம் 1926,ல் வெளியிடப்பட்டது. 1945,ம் ஆண்டு வரை மொத்தம் 1 கோடி பிரதிகள் அடிக்கப்பட்டன. தற்போது மெயின் காம்ப் புத்தகத்தின் 6-வது பதிப்பு அச்சில் உள்ளது.
இந்நிலையில், மெயின் காம்ப் புத்தகம் ஜெர்மன் நாட்டில் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக அதன் பதிப்பாளர் தெரிவித்துள்ளார்.இரண்டு தொகுதிகள் கொண்ட இந்த புத்தகம் கடந்த ஆண்டு ஜெர்மனியில் அதிக அளவில் விற்பனை ஆகி உள்ளதாக அந்நாட்டு வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான புதிய உரை விளக்கத்துடன் கூடிய மெயின் காம்ப் புத்தகத்தின் 85 ஆயிரம் பதிப்புகள் விற்பனையாகி உள்ளது.
முதலில் 4 ஆயிரம் பதிப்புகள் தான் அச்சிட திட்டமிடப்பட்டது. ஆனால் தேவை இருந்ததால் அதிக அளவில் அச்சிடப்பட்டது.