வாகனங்களை வேகமாக செலுத்திச் சென்றமைக்காக தண்டம் விதிக்கப்பட்டோர், தமது வாகங்களுக்கான இலக்கத் தகடுகளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை விரைவில் ல்ஒன்ராறியோவி நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.Ontarians with unpaid speeding tickets to be denied licence plates
வேகமாக வாகனத்தைச் செலுத்தியமை, கவனயீனமாக வாகனத்தைச் செலுத்திச் சென்றமை உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டம் விதிக்கப்பட்டு, அதனை முழுமையாக செலுத்த தவறியவர்களுக்கு வாகன இலக்கத் தகட்டினை வழங்க மறுப்பதற்கான அதிகாரத்தினை ஒன்ராறியோ மாநில அரசாங்கம் நகரசபைகளுக்க வழங்கவுள்ளது.
அதன்படி தமது தண்டப்பணத்தினை முழுமையாக கட்டி முடிக்காதோர் தமது வாகனங்களுக்கான இலக்கத் தகட்டினை புதுப்பித்து பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை எதிர்பரும் மே மாதத்தில் இருந்து நடப்புக்கு வரும் என்று கூறப்படுகிறது.
வாகனங்களை நிறுத்தி வைப்பது குறித்த குற்றச் செயல்கள் மற்றும் சிவப்பு சமிக்கை விளக்குகளில் வாகனங்ளைச் செலுத்திச் சென்றமை தொடர்பிலான குற்றச் செயல்களுக்கே இலக்கத் தகடு நிராகரிக்கப்படும் நடைமுறை தற்போது செயற்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதத்தில் இருந்து வேகமாக வாகனத்தை செலுத்துதல், முறையற்ற விதத்தில் வாகனத்தை செலுத்துதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இனங்காணப்பட்டோரும், முழுமையாக தண்டப்பணத்தினை செலுத்தி முடிக்காத சந்தர்ப்பத்தில் தமது வாகனங்களுக்கான இலக்கத் தகட்டினை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்படும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாநில அளவிலான நெடுஞ்சாலை விதிமீறல்கள் உட்பட, நகர சபைகளுக்கு இவ்வாறான தண்டப்பணமாக செலுத்தப்பட வேண்டிய தொகையில், 1.4 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
சில தண்டப்பணங்கள் 50 ஆண்டுளுக்கும் மேலாக செலுத்தப்படாமல் உள்ள நிலையில், அவற்றை அறவிடுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு ஒன்ராறியோவில் உள்ள நகரசபைகள் மிக நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே, நகரசபைகளுக்கு இந்த புதிய அதிகாரம் தற்போது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.