டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டு வந்தன. அப்போது முதல் நியமனமாக, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நிக்கி ஹேலி (44) பெயர் அறிவிக்கப்பட்டது. தற்போது டிரம்ப் அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டின் செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஹேலியின் நியமனத்திற்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பெருமளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் அதிபர் நிர்வாகத்தில் முதல் முறையாக பங்கு பெறும் அமெரிக்க வாழ் இந்தியர் ஹேலி என்பது குறிப்பிடத்தக்கது.