கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபர் மொரோக்கோ நாடடைச் சேர்நதவர் என்று தவறான தகவலை வெளியிட்ட ‘Fox News’ ஊடகத்திடம் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.
இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்டு்ளளதன் மூலம் குறித்த அந்த ஊடகம் மக்களை தவறாக வழிநடாத் முயன்றுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் தொடர்பாடல் துறை இயக்குனர் கேட் பேர்ச்சேஸ் குறித்த அந்த ஊடகத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கனடா ஒரு திறந்த பல்கலாச்சார நாடு என்பதையும், அனைவரையும அரவணைக்கும் நாடான கனடாவில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இலட்சக்கணக்கான அகதிகளும், குடிவரவாளர்களும் வாழ்ந்து வருவதாகவும், இங்கு நூற்றுக்கணக்கான பண்பாடுகளும், மொழிகளும், சமய நம்பிக்கைகளும் உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில விபரித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இவ்வாறு தவறான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதன் மூலம், குறித்த அந்த ஊடகம் தேவையற்ற ஆள் அடையாள அரசியலை நிகழ்த்துவதாகவும், இதன்மூலம் கனேடிய சமூகத்தின் மத்தியில் பிரிவினையையும் பயத்தினையும் உண்டாக்க முனைவதாகவும், இது உயிரிழந்து ஆறு பேரையும் அவர்களின் குடும்பத்தையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகங்களுக்க இடையே சுவர்களை எழுப்பி பிரிவினைகளை உண்டாக்காது, அனைத்து சமூகங்களையும் ஒன்றியைத்து அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையிலேயே அனைவரும் செயற்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தினை உண்டுபண்டுவது ஒருபோதும் எம்மை பலமுள்ளவர்கள் ஆக்காது எனவும், அது எம்மை பலவீனமாணவர்கள் ஆக்குவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.