இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றையடுத்து, ரயில்கள் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் அருகே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் பீதியடைந்துள்ளனர்.
இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் மற்றும் இராமநாதபுரம் கடலோரப்பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) மாலைமுதல் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மதுரையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி பயணித்த பயணிகள் ரயில் பாம்பன் கடல் அருகே பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை ஓரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதுடன், ரயில் எப்போது புறப்படும் என அதிகாரிகள் தரப்பில் எந்தவித தகலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ஆனால் சுமார் 3 மணிநேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில், அதன் பின்னர் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து வழக்கத்தைவிட மிக குறைந்த வேகத்தில் ரயில் பாலத்தை கடந்துள்ளது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.