வேளாண் தொழிலாளர்களின் உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக தெரிவித்து, தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களும், அவர்களது ஆதரவாளர்களும் மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொன்றியல் புனித ஜோசப் செபக்கூடத்திற்கு முன்னால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
தனக்கு குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகவும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதாகவும், பயண கட்டணமேனும் தனக்கு வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கோழி பண்ணை ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஊழியர்களுக்கான தொழில் அனுமதி பத்திரங்கள் அனைத்தும் பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்டிருப்பதால் அதனை வாசித்து புரிந்துக் கொள்ள முடியாது காணப்படுவதாக மொழிப்பெயர்ப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு நிரந்தர விதிவிடம் வழங்கப்பட வேண்டும் இல்லையேல் திறந்த பணி அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தற்காலிக தொழிலாளர்களுக்கான வேலை நிலைமைகளை மேம்படுத்துவது தொடர்பில் புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.