ரொறன்ரோவின் மால்வெர்ன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அல்லது குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் நேற்று காலை இடம்பெற்றிருந்த மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், பெண்ணொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.