ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கழித்து 1 மாத காலம் பரோலில் வந்துள்ள பேரறிவாளனை சினிமா இயக்குனர்கள் அமீர், பொன்வண்ணன் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அதன்பிறகு அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது :-
பேரறிவாளன் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். 26 ஆண்டுகள் கழித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மறந்து போய், தற்போது உறவினர்களை காணும்போது இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது. 1 மாத பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே நேரத்தில் பேரறிவாளனின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி நீடிப்பதற்காகவும், அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற தாயார் அற்புதம்மாள் எண்ணத்தை நிறைவேற்றவும் தமிழக அரசு நன்னடத்தையின் அடிப்படையில் அவரை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும். எனவும் அவர்கள் கூறினர்.