யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன், ஈச்சமோட்டை வீதிப் பகுதியில் ஒருவர் மீதும் நேற்று வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதான வீதியில் உள்ள சலவை தொழிலில் தின் உரிமையாளர் மற்றும் சலவைதொழில் நிலையத்தில் நின்ற நபர் மீதும், ஈச்சமோடாடை பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் இளைஞனை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.
இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகிய கலைச்செல்வன் (வயது 47) கவின்றோ (வயது 48) அ.சுஜீவன் (வயது 21) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.