ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காவல் நிலையம் ஒன்றின் வெளியே உள்ள சோதனை இடம் ஒன்றில் நடாத்தப்பட்ட இந்த தற்கொலைத் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 8 பேர் பலியானதாக தெரிவித்துள்ள போதிலும், பலியானவர்கள் குறித்த விவரத்தை காவல்துறையினர் உடனடியாக வெளியிடவில்லை.