இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கலவரம் தொடர்பான வழக்கொன்றில் மூவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது.
2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் நாள் அகமதாபாதின் நரோதா பாட்டியா பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் குறைந்தது 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2009-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கிய போது 62 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் பின்னர் கீழமை நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த மூன்று பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.
எனினும் அதனைத் தொடர்ந்து தொடர்ரப்பட்ட மேன்முறையீட்டு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட உமேஷ் பர்வாட், பஞ்சேந்திர சிங் ராஜ்புத் மற்றும் ராஜ்முகார் செளமல் ஆகிய குறித்த அந்த 3 பேருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.





