எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 11 ஆயுள் தண்டனைக் கைதிகள் தண்டனைக் காலம் முடிவடையும் முன்னரே இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறைச் சாலைகளில் 10 ஆண்டு சிறை தண்டனை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் அறிவிப்பின்படி கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக புழல் சிறையில் இருந்து கடந்த 6ஆம் நாள் 67 ஆயுள்கைதிகளும், கடந்த 12ஆம் நாள் 52 கைதிகளும், 20ஆம் நாள் 47 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதன் நான்காவது கட்டமாக புழல் சிறையில் இருந்து மேலும் 11 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.