அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் புதியதாக சில நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் ‘காலா’ படத்தில் நடித்த சாக்சி அகர்வால் மற்றும் பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் ரமேஷ் திலக்கும் இணைந்தனர். தற்போது இந்த படத்தில் விவேக் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் அஜித்-விவேக் கூட்டணி, ‘வீரம்’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ உள்பட ஒருசில படங்களில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.