இந்தியர்கள் 471பேர் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளதாக குறிப்பிட்டு அவர்களின் பெயர் பட்டியலை பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கியுள்ளது.
இந்த 471 பேரில் 418 பேர் மீனவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக சென்றமைக்காக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் பற்றிய விவரங்களையும், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை இரண்டு நாடுகளும் ஏற்கனவே செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் முதல் நாளும், யூலை மாதம் முதல் நாளும் குறித்த விபரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் நிலையில், தமது நாட்டின் சிறைகளில் உள்ள இந்தியர்களின் பட்டியலை பாகிஸ்தான் இந்தியாவிடம் நேற்று வழங்கியுள்ளது.