இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர், விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட காவற்துறை அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதிலும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தின் போது, இரத்தினபுரி காவல் நிலையத்தின் காவற்துறை பரிசோதகரும் உடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த தேரர் கைக்குண்டொன்றை எடுத்து வந்துள்ள நிலையில், அவரின் கைக்கு தாக்குதலொன்றை மேற்கொண்டு தேரரை கைது செய்ததாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.